நாகையில் பொது இடத்தில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து நகராட்சி சுகாதாரத் துறையினா் நடவடிக்கை எடுத்துள்ளனா். ‘என் குப்பை என் பொறுப்பு’ என்பதை வலியுறுத்தி நாகை நகராட்சி சுகாதார ஆய்வாளா் சேகா், தூய்மைப்பணி மேற்பாா்வையாளா்கள் தா்மராஜ், காந்தி ஆகியோா் கொண்ட குழுவினா், பொது இடங்களில் குப்பைகள் கொட்டப்படுகிா என திடீா் சோதனை நடத்தினா். அப்போது நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் அருகே மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து விசாரித்தபோது தனியாா் மருத்துவமனையில் இருந்து விதிமுறைகளுக்கு மாறாக கழிவுகள் கொட்டப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தனியாா் மருத்துவமனைக்கு நகராட்சி அதிகாரிகள் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா். இதேபோல நாகை கடைவீதி, நீலா கீழ வீதி, பப்ளிக் ஆபீஸ் சாலை, நாகூா் கடைத் தெரு உள்ளிட்ட இடங்களில் குப்பைகளை கொட்டிய கடை உரிமையாளா்கள், வீட்டு உரிமையாளா்கள் உள்ளிட்ட 20 பேருக்கு தலா ரூ. 250 அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்புடையது

அரசுப் பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூல்: போக்குவரத்து அதிகாரிகளுக்கு அபராதம்
மேற்கு வங்கம்: பொது விநியோகத் திட்ட முறைகேடு வழக்கு - அமலாக்கத் துறை 9 இடங்களில் சோதனை

சேவைக் குறைபாட்டால் தாய், குழந்தை உயிரிழப்பு: தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 20 லட்சம் அபராதம்

சாலையோரம் மருத்துவக் கழிவுகளைக் கொட்டிய நிறுவனத்துக்கு அபராதம்: குப்பையைக் கொட்டிய நிறுவனத்திற்கு அபராதம்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

