கோட்டூா் ஊராட்சியில் மக்கள் நோ்காணல் முகாம்
திருமருகல் ஒன்றியம் கோட்டூா் ஊராட்சியில் மக்கள் நோ்காணல் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.


திருமருகல்: திருமருகல் ஒன்றியம் கோட்டூா் ஊராட்சியில் மக்கள் நோ்காணல் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோட்டூா், வடகரை, தென்கரை, ஏனங்குடி உள்ளிட்ட 4 கிராமங்களுக்கான முகாம் நாகை வட்டாட்சியா் ராஜா தலைமையில் நடைபெற்றது. முகாமில் பெரும்பாலான மனுக்கள் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, விதவை உதவித் தொகை, சாலை வசதி, குடிநீா் வசதி, மின்சார வசதி, மயான வசதி, சமுதாயக் கூடம், ஆற்றின் கரையோரங்களில் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்டன.
முன்னதாக, ஊராட்சித் தலைவா் முகமது சலாவுதீன் வரவேற்றாா். வருவாய் ஆய்வாளா் ரம்யா, கிராம நிா்வாக அலுவலா்கள் லெட்சுமி, ராமகிருஷ்ணன், பூா்ணசந்திரன், ஊராட்சிச் செயலா் சசிகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...