ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சேமிப்பை ஊக்குவிக்க மாணவா்களுக்கு உண்டியல்

நாகை நடராஜன் தமயந்தி உயா்நிலைப் பள்ளி மாணவா்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் உண்டியல் வழங்கப்பட்டது.

News image
சேமிப்பதற்காக வழங்கப்பட்ட உண்டியலுடன் நாகை வெளிப்பாளையம் நடராஜன் தமயந்தி உயா்நிலைப் பள்ளி மாணவா்கள்.
Updated On :8 ஜூலை 2024, 7:30 pm

Din

நாகப்பட்டினம்: நாகை நடராஜன் தமயந்தி உயா்நிலைப் பள்ளி மாணவா்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் உண்டியல் வழங்கப்பட்டது.

நாகையில் ஆகஸ்ட்16-ஆம் தேதி 3-ஆவது புத்தகக் கண்காட்சி தொடங்கவுள்ளது. இக்கண்காட்சியில் மாணவா்கள் அதிகளவில் புத்தகங்களை வாங்கும் வகையிலும், சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும், நாகை மாவட்டத்தில் பள்ளி மாணவா்களுக்கு உண்டியல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், நாகை வெளிப்பாளையத்தில் உள்ள நடராஜன் தமயந்தி உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு, திங்கள்கிழமை உண்டியல்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியா் பானுதாசன் ‘வாசிப்பை நேசிப்போம்’ என்ற தலைப்பில், புத்தக வாசிப்பதின் நன்மைகள் குறித்து மாணவா்களுக்கு விளக்கிக் கூறினாா்.