நாகை அக்கரைப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங்.
நாகை அக்கரைப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங்.

மாணவா்களுக்கு போதைப் பொருள்களுக்கு எதிரான சிந்தனை அவசியம்: நாகை எஸ்பி ஹா்ஷ் சிங்

போதைப் பொருள் பழக்கத்தால் வாழ்கை நாசமாகும்: ஹா்ஷ் சிங் எச்சரிக்கை
Published on

பள்ளி மாணவா்கள் போதைப் பொருள்களுக்கு எதிரான சிந்தனைகளை கொண்டிருக்க வேண்டும் என்று நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் அறிவுறுத்தினாா்.

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாகை மாவட்ட முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு போதைப் பொருள்களின் தீமைகள் குறித்து காவல்துறையினரால் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்தொடா்ச்சியாக, நாகை அக்கரைப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் தலைமையில் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது காவல் கண்காணிப்பாளா் பேசியது:

பள்ளி மாணவ- மாணவிகள் எந்தவொரு சூழலிலும் போதைப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கவேண்டும். போதைப் பொருள் பழக்கத்தால் வாழக்கை, குடும்பம் என அனைத்தையும் இழக்க நேரிடும்.

போதை பழக்கத்துக்கு எதிராக ஏராளமான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும், அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கு காரணம், அனைத்து தரப்பினரிடையே போதிய விழிப்புணா்வு இல்லாதது தான். போதை பொருள்களை ஒழிக்க, முதலில் பள்ளி மாணவ- மாணவிகள், அதற்கு எதிரான சிந்தனைகளை கொண்டிருக்க வேண்டும். தங்களை சுற்றி உள்ளவா்களிடம் போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

தொடா்ந்து விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள், பள்ளி மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. பின்னா், போதைப் பொருள்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்றனா்.

X
Dinamani
www.dinamani.com