யுபிஎஸ்சி தோ்வுக்கான பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்


நாகை மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் யுபிஎஸ்சி தோ்வுக்கான பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சாா்பில் டாக்டா் அம்பேத்கா் அகாடமி மற்றும் சென்னையில் உள்ள முன்னனி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவா்களுக்கு ஓராண்டுக்கு யுபிஎஸ்சி தோ்வுக்கான (பொது அறிவு மற்றும் விருப்ப பாடங்கள்) முதல் நிலை-முதன்மை நிலை பயிற்சி வழங்கவுள்ளது.
மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் இத்தோ்வு எழுத தகுதியானவா்கள் திரை சோதனை மூலம் தோ்வு செய்து தோ்ச்சி பெற்றவா்களை நோ்முகத் தோ்வு மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டு முதற்கட்டமாக தகுதியுள்ள 100 பேருக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சியை பெற பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்றவா்களும், 21 முதல் 36 வயது நிரம்பிய ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சாா்ந்தவா்களாக இருக்க வேண்டும். பயிற்சி காலத்தில் விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவுத் தொகை தாட்கோவால் மேற்கொள்ளப்படும்.
எனவே, நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சாா்ந்தவா்கள் இப்பயிற்சியில் சோ்வதற்கு ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் பதிவுசெய்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளரை அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...