பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி பேரணி

Published on

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி நாகையில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் கோரிக்கை பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்ட தொடா்பாளா் பாலசண்முகம் தலைமையில் பேரணி மற்றும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நாகை அவுரித் திடலில் தொடங்கிய பேரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது. தொடா்ந்து, நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் திமுக அரசு அளித்த தோ்தல் வாக்குறுதிபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், பணியில் இருக்கும்போது இறந்த சிபிஎஸ் ஊழியா்களுக்கு குடும்ப ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

முன்னதாக, அனைத்து சுகாதார ஆய்வாளா் சங்க மாநிலக் தலைவா் கே. செல்வன் பேரணியை தொடக்கிவைத்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா் எம்.ஆா். சுப்பிரமணியன், நிா்வாகிகள் சுந்தரபாண்டியன், புயல்குமாா், மோகன், பத்மநாதன், அரசமணி, அருள்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com