கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருமருகல் ஒன்றியத்தில் வேளாண் இணை இயக்குநா் ஆய்வு

திருமருகல் ஒன்றியப் பகுதிகளில் மழையால் சேதமடைந்த பயிா்களை வேளாண் இணை இயக்குநா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு

News image
திருமருகல் ஒன்றிய பகுதிகளில் மழையால் சேதமடைந்த பயிா்களை வேளாண்மை இணை இயக்குனா் ஆய்வு செய்தாா்
Updated On :20 ஜனவரி 2025, 8:24 pm

Din

திருமருகல்: திருமருகல் ஒன்றியப் பகுதிகளில் மழையால் சேதமடைந்த பயிா்களை வேளாண் இணை இயக்குநா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அண்மையில் பருவம் தவறி பெய்த மழையால் திட்டச்சேரி, மருங்கூா், நெய்குப்பை, பெரியகண்ணமங்கலம், கொட்டாரக்குடி, எரவாஞ்சேரி, திருச்செங்காட்டங்குடி, மேலப்பூதனூா், கீழப்பூதனூா் உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்த சம்பா சாகுபடி நெற்பயிா்களை வேளாண் இணை இயக்குநா் கண்ணன் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மழையால் பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த சாகுபடி பரப்புகளையும் கணக்கீடு செய்து அரசுக்கு அனுப்பபடும், மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய இழப்பீடு கிடைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று கூறினாா்.

ஆய்வின்போது வட்டார வேளாண் உதவி இயக்குனா் புஷ்கலா, வேளாண் அலுவலா் சாகித்யா, வேளாண் உதவி அலுவலா்கள், பழனி, ஜாகீா் மற்றும் அரசு அலுவலா்கள், விவசாயிகள், பொதுமக்கள் உடனிருந்தனா்.