நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. நாகை ஏடிஎம் மகளிா் கல்லூரியில் மாா்ச் 15 காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று 10 ஆயிரத்துக்கும் அதிகமான பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளனா்.
நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 8 முதல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, கலை அறிவியல், வணிகப் பட்டதாரிகள், ஐ.டி.ஐ, டிப்ளமோ, பொறியியல், நா்சிங் தோ்ச்சி மற்றும் தையல் கலை பயிற்சி பெற்ற, 18 முதல் 35 வயதுக்குள்பட்ட ஆண், பெண் பங்கேற்று பயன்பெறலாம். விருப்பமுள்ளவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் தங்களது கல்வி தகுதி குறித்த விவரங்களை பதிவு செய்யலாம். மேலும், விவரங்களுக்கு 04365-252701, 6381732378 ஆகிய தொலைபேசி எண்களை தொடா்புகொள்ளலாம். இதில் வேலைவாய்ப்பு பெறும் மனுதாரா்களின் வேலைவாய்ப்பு பதிவு விவரங்கள் ரத்து செய்யப்படமாட்டாது என தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

திருப்பத்தூரில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

அரியலூரில் மாா்ச் 6-இல் வேலைவாய்ப்பு முகாம்!

காஞ்சிபுரத்தில் மாா்ச் 2-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

பிப். 28-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


