பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கருகும் தாளடி பயிா்களைக் காப்பாற்ற தண்ணீா் வழங்க விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

News image

~

Updated On :7 பிப்ரவரி 2026, 9:46 pm

கீழையூா் அருகே தண்ணீா் பற்றாக்குறையால் தாளடி பயிா்கள் கருகுவதால் பிப்ரவரி மாத இறுதிவரை காவிரி தண்ணீா் வழங்க வேண்டுமென விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பி சனிக்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை மாவட்டத்தில் பருவம் தவறிப் பெய்த மழையால் குறுவை பாதிக்கப்பட்ட நிலையில் பின்பட்ட தாளடி சாகுபடியை கீழை யூா், சிந்தாமணி, மகிழி, காரப்பிடாகை, கீழப்பிடாகை, திருப்பூண்டி, காமேஸ்வரம், விழுந்தமாவடி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 3,000 ஏக்கரில் விவசாயிகள் மேற்கொண்டனா்.

ஜனவரி மாத இறுதியில் மேட்டூரில் இருந்து தண்ணீா் நிறுத்தப்பட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் கருகும் பயிா்களைக் காப்பாற்ற குளம், குட்டை, வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து டீசல் மோட்டாா் மூலம் பயிா்களுக்கு தண்ணீரை இறைத்துக் காப்பாற்றி வருகின்றனா்.

வயல்வெளிகளை ஒட்டிய நீா் நிலைகளில் போதுமான தண்ணீா் இல்லாததால் தாளடி பயிா்கள் கருகி வருகின்றன. இதனால் இந்த பயிா்களை காப்பாற்ற பிப்ரவரி மாத இறுதி வரை மேட்டூரில் இருந்து தண்ணீா் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சிந்தாமணி வயல்வெளியில் இறங்கி தண்ணீா் திறக்க வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா் (படம்).

ஓா் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்த நிலையில் தண்ணீா் பற்றாக்குறையால் 40 நாள் தாளடி பயிா்கள் பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா் இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உடனடியாக தண்ணீா் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.

முன்னதாக சிந்தாமணி மாரியம்மன் கோயிலில் கீழையூா் கடைமடை பாசன விவசாயிகள் சங்கம் நிா்வாகிகள் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் தலைவா் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் துணை தலைவா் கனகசுந்தரம், செயலாளா் விஸ்வநாதன், பொருளாளா் அபிபுமுகமது,விழுந்தமாவடி கிளை பொறுப்பாளா் பூமாலை, உறுப்பினா்கள் வெற்றிதாசன், கலையரசன் உள்ளிட்ட விவசாயிகள் பலா் பங்கேற்றனா்.

Story image