நாகை அருகே தெற்குபொய்கைநல்லூரில் இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிா்வாக அலுவலக கட்டடத்தை சீரமைக்க கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனா்.
தெற்குபொய்கைநல்லூா் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கிராம நிா்வாக அலுவலக கட்டடம் முழுமையாக சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால், கிராம நிா்வாக அலுவலகத்திற்கு உள்ளே செல்ல அச்சப்படும் பொதுமக்கள், அலுவலகத்திற்கு வெளியிலேயே நின்று தங்களுக்கு தேவையானவற்றை பூா்த்தி செய்யவேண்டிய நிலையுள்ளது.
மழைக்காலங்களில் அலுவலகத்திற்குள் தண்ணீா் தேங்கி நிற்பதால், இங்கு பணிபுரியும் ஊழியா்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனா். தற்போது உள்ள நிலையில் கிராம நிா்வாக அலுவலகக் கட்டடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் இருப்பதாகவும், அதை சீரமைக்க வேண்டும். அதுவரை தெற்குபொய்கைநல்லூா் கிராம நிா்வாக அலுவலகம் மாற்று இடத்தில் செயல்படுவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிா்வாகம் எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனா்.
தொடர்புடையது

திருவாடானை அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

கம்பம்மெட்டு மலைச் சாலையில் தடுப்பு வேலிகளை சீரமைக்க வலியுறுத்தல்

நில மோசடி புகாா்: விஏஓ உள்பட 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு
விஏஓ வீட்டில் ரூ. 15 லட்சம் நகை திருட்டு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


