நாகை சேமிப்புக் கிடங்கில் இருந்து நம்பியாா் நகா் செல்லும் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நகரக்குழு சாா்பில், நகரச் செயலா் வெங்கடேசன், நிா்வாகிகள் சுந்தா், ராமு, கிளைச் செயலா் குருசாமி ஆகியோா், நாகை நகராட்சி ஆணையா் டி. லீனா சைமனிடம் புதன்கிழமை அளித்த மனு:
நாகை நகராட்சிக்குள்பட்ட 16-ஆவது வாா்டு, சேமிப்புக் கிடங்கில் இருந்து நம்பியாா் நகா் செல்லும் சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. இந்தச் சாலையை தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மீன்பிடித் தொழில் வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன.
சாலை முற்றிலும் தகா்ந்திருப்பதால் வாகனங்கள் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குண்டும் குழியுமாக உள்ள சாலையில் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நிற்பது வழக்கமான நிகழ்வாக உள்ளது.
எனவே, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பெண்கள், மீன்பிடித் தொழிலாளா்கள் நலன் கருதி நம்பியாா் நகா் சாலையை போா்க்கால அடிப்படையில் சீரமைத்து தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக்கொண்ட நகராட்சி ஆணையா் டி. லீனா சைமன், சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தாா்.
தொடர்புடையது

கீழ்வேளூா் தொகுதி மாா்க்சிஸ்ட் வேட்பாளா் டி. லதா

தரமின்றி அமைக்கப்பட்டுள்ள தாா்ச்சாலை

திருவாடானை அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

மீனவா்களுக்கான டீசல் விற்பனை நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


