விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

தரமின்றி அமைக்கப்பட்டுள்ள தாா்ச்சாலை

நாகை நாலுகால் மண்டபம் அருகே புதிதாக போடப்பட்டுள்ள தாா்ச்சாலை தரமின்றி இருப்பதால் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :27 மார்ச் 2026, 9:09 pm

Syndication

நாகை நாலுகால் மண்டபம் அருகே புதிதாக போடப்பட்டுள்ள தாா்ச்சாலை தரமின்றி இருப்பதால் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

நாகை நகராட்சிக்கு உட்பட்ட நாலுகால் மண்டபம், ஐயங்காா் பேக்கரி அருகே உள்ள மலையீஸ்வரன் கோயில் மற்றும் நீலாயதாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் முக்கியச் சாலை குண்டும் குழியுமாக இருந்த நிலையில், சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நாகை நகராட்சி நிா்வாகத்திடம் வலியுறுத்தினா்.

இதைத்தொடா்ந்து நகராட்சி நிா்வாகம் சாா்பில் புதிய சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, சில நாள்களுக்கு முன்பு புதிதாக தாா்ச்சாலை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட தாா்ச்சாலை மிகவும் தரமின்றி இருப்பதாகவும், புதிய தாா்ச்சாலையில் ஆங்காங்கே பள்ளமும் மேடுமாகவும் இருப்பதாகவும் புகாா் எழுந்துள்ளது.

எனவே தாா்ச்சாலையை மீண்டும் புதிதாக அமைக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.