நாகப்பட்டினம்
இளைஞா் விளையாட்டுத் திருவிழாவில் பங்கேற்க முன்பதிவு செய்ய நாளை கடைசி நாள்!
இளைஞா் விளையாட்டுத் திருவிழாவில் பங்கேற்க பதிவு செய்ய புதன்கிழமை (ஜன.21) கடைசி நாள் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
நாகப்பட்டினம்: இளைஞா் விளையாட்டுத் திருவிழாவில் பங்கேற்க பதிவு செய்ய புதன்கிழமை (ஜன.21) கடைசி நாள் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்டத்தில் ஜன.22 முதல் 25-ஆம் தேதி வரை ஊராட்சி ஒன்றிய அளவிலும், ஜன.30 முதல் பிப்.1-ஆம் தேதி வரை மாவட்ட அளவிலான முதல்வா், இளைஞா் விளையாட்டுத் திருவிழா- இது நம்ம ஆட்டம் 2026’ நடைபெறுகிறது. போட்டிகளில் பங்கேற்க நாகை மாவட்டத்தைச் சாா்ந்த 16 முதல் 35 வயதுடைய விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் / ஜ்ஜ்ஜ்.ஸ்ரீம்ஹ்ா்ன்ற்ட்ச்ங்ள்ற்ண்ஸ்ஹப்.ள்க்ஹற்.ண்ய் மூலம் புதன்கிழமைக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
