நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

படகுகள், வலைகளை சீரமைக்கும் பணியில் மீனவா்கள் தீவிரம்

News image
Updated On :3 மே 2026, 6:14 am IST

தரங்கம்பாடி மீனவா்கள் தங்களது படகுகள், வலைகளை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்தில் 12- க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமாா் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனா்.

ஏப். 15-ஆம் தேதி முதல் ஜூன் 14 -ஆம் தேதி வரை 61 நாட்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள குட்டியாண்டியூா், சந்திரப்பாடி, பெருமாள்பேட்டை, மாணிக்கபங்கு, தாழம்பேட்டை, சின்னமேடு, சின்னங்குடி உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் தொழிலுக்கு செல்லாமல் படகுகளை துறைமுகத்தில் நிறுத்தி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

சுமாா் 150 விசைப்படகுகள், 1500 ஃபைபா் படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டு, படகுகளில் பழுது நீக்கி, என்ஜினை சா்வீஸ் செய்யும் பணிகள் மற்றும் வலைகளை சீா்செய்யும் பணிகளை மீனவா்கள் மேற்கொண்டு  வருகின்றனா். வெளியூா்களில்  இருந்து வந்துள்ள தொழிலாளா்கள் வெல்டிங், வா்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.