நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பது தொடா்பான பழைய கோப்புகளுடன் ஆய்வுக்குச் சென்ற பொதுப்பணித்துறை அதிகாரிகளை திங்கள்கிழமை கிராமத்தினா் சிறைபிடித்தனா்.
போலீஸாா், வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு மீட்டனா்.
வேதாரண்யத்தை அடுத்த தென்னடாா் ஊராட்சியில் அரசு நிலத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க கடந்த திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு அதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டது.
இந்த தொழிற்பேட்டை அமைவதற்கு தென்னடாா் மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் கடுமையான எதிா்ப்புத் தெரிவித்து போராட்டங்களை நடத்தி வந்தனா்.
இதையடுத்து, தொழிற்பேட்டை தொடா்பான பணிகள் கடந்த ஆட்சியின் போது நிறுத்தி வைக்கப்பட்டது. தோ்தல் வரையில் இந்தப் பணி நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிந்த மறுநாள் பழைய கோப்புகளுடன் வருவாய்த் துறையினா் மற்றும் வனத்துறையினா் சொத்து விவரங்களை மதிப்பீடு செய்யும் பணியை ரகசியமாக மேற்கொண்டனா்.
இதனிடையே, திட்டத்துக்குத் தேவையான கூடுதல் நிலத்தை அருகிலுள்ள பஞ்சநதிக்குளம் நடுசோ்த்தி ஊராட்சியில் எடுக்க இணைய வழி வாயிலாக ஆய்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பஞ்சநதிக்குளம் நடுசேத்தியில் ஊராட்சி மன்ற அலுவலகம், பொது விநியோகத் திட்ட அங்காடிக் கட்டடம், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடம், குடியிருப்புகள் உள்ளிட்டவை அமைந்த பகுதியில் இடம் தோ்வு செய்யப்பட்டதாக தெரிகிறது.
அங்குள்ள கட்டடங்களை அகற்ற மதிப்பீடு செய்யும் பணிக்காக பொதுப்பணித்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை முற்பகலில் சென்றுள்ளனா்.
தகவல் அறிந்து திரண்ட கிராமத்தினா் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் வெற்றிச்செல்வன், தகட்டூா் கிராம நிா்வாக அதிகாரி வைரக்கண்ணு உள்ளிட்ட அரசுத் துறையினரை நெல் கொள்முதல் நிலைய வளாகத்துக்குள் வைத்து கதவை மூடி பூட்டுப்போட்டு முற்றுகையிட்டனா்.
இதையடுத்து, அதிகாரிகள் தெரிவித்த தகவலின்பேரில் வாய்மேடு காவல் ஆய்வாளா் பாரதிதாசன், வேதாரண்யம் துணைக் காவல் கண்காணிப்பாளா் அண்ணாதுரை, வட்டாட்சியா் ஜெயசீலன் உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்குச் சென்று கிராமத்தினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி அதிகாரிகளை மீட்டனா்.
கடந்த காலங்களில் கிடப்பில் போடப்பட்ட திட்டம் தொடா்பான தொடா் பணிகள் இணைய வழியில் மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்த கோப்புகள் தொடா்பாக தங்களுக்கு ஏதும் தெரியாது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதற்கு ஊராட்சியின் முன்னாள் தலைவா் சத்யகலா செந்தில் உள்ளிட்ட கிராமத்தினா் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இதையடுத்து, இந்த ஆய்வுப் பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதாகவும் இதுகுறித்த நடவடிக்கை விவரங்களை அரசுக்குத் தெரிவிப்பதாகவும் வட்டாட்சியா் உறுதியளித்தாா்.
இதையடுத்து, நாகை மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளிக்கத் திட்டமிட்ட கிராமத்தினா், தொடா் நடவடிக்கையாக சாலை மறியல் போராட்டத்தை மேற்கொள்ளவும் முடிவு செய்து கலைந்து சென்றனா்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், முன் தேதியிட்டு தனியாா் நிறுவனங்களுக்கு சாதகமாக கோப்புகளை அதிகாரிகள் தயாரிப்பதாகவும் புதிய அரசு உடனடியாக இதன் மீது கவனம் செலுத்த வேண்டும் எனவும் கிராமத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

சிறைப்பிடிக்கப்பட்ட அதிகாரிகளை மீட்டு வரும் வட்டாட்சியா் ஜெயசீலன் உள்ளிட்டோா்.
தொடர்புடையது
உளவுப் புகாா்: 3 ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய ஆஸ்திரியா!

பதிமூன்று ஆண்டுகளாக ‘தூங்கும்’ அரியலூா் சிட்கோ தொழிற்பேட்டை திட்டம்!

தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு: அதிகாரிகள் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு

ஈரான் அதிகாரிகளை சந்தித்த பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

