3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் காரைக்காலில் கலைத் திருவிழா

காரைக்காலில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கலைத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :18 அக்டோபர் 2017, 4:59 am IST

காரைக்காலில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கலைத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தேசிய இடைநிலைக் கல்வி இயக்கம், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் காரைக்கால் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் கலா உத்சவ் என்கிற கலைத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொண்டனர்.
காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 14 அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகள் கலந்துகொண்டன. இசை, நடனம், நாடகம் மற்றும் வரைகலை ஆகிய பிரிவுகளில் 23 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
முன்னதாக அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் கே. ராஜசேகரன் கலா உத்ஸவத்தின் நோக்கம் குறித்துப் பேசினார்.
கல்வித்துறை துணை இயக்குநர் ஜி. சுப்ரமணியன், முதன்மைக் கல்வி அலுவலர் ஏ. அல்லி, திட்ட ஒருங்கிணைப்பாளர் டி. பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
நிறைவில், நெடுங்காடு ஜவாஹர்லால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளி இசை பிரிவிலும், விழுதியூர் அரசு உயர்நிலைப்பள்ளி நடனத்திலும், தேனூர் அரசு மேல்நிலைப்பள்ளி நாடகத்திலும், கீழகாசாக்குடி ஆத்மாலயா பள்ளி ஓவியத்திலும் தேர்வு செய்யப்பட்டன.
இதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் புதுச்சேரியில் நவம்பர் மாதம் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநில அளவிலான கலா உத்ஸவ் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.