காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

பேருந்து மீது கார் மோதி ஆசிரியை சாவு

காரைக்கால் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானதில், அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழந்தார். மேலும், 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

Updated On :30 ஜனவரி 2024, 10:02 pm IST

காரைக்கால் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானதில், அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழந்தார். மேலும், 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
நாகை மாவட்டம், பொறையாறு அரண்மனைத் தெருவைச் சேர்ந்தவர் பென்னி அன்பரசு. இவரது மனைவி அருள்ஜோதி பாக்கியராணி (48). இவர் அரசுப்பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், சனிக்கிழமை பென்னி அன்பரசின் உறவினர் இல்ல சுபநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது உறவினர்களுடன் 3 காரில் அறந்தாங்கி சென்றுவிட்டு, காரைக்கால் வழியாக அனைவரும் பொறையாறு திரும்பிக் கொண்டிருந்தனர்.
முதலில் பென்னிஅன்பரசு ஓட்டிய கார் சென்று கொண்டிருந்தது. காரைக்கால் பகுதி நிரவி அருகே ஓ.என்.ஜி.சி.யைக் கடந்தபோது, திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்த கார், இடதுபுறமாக நோக்கிச் சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த தமிழக அரசுப் பேருந்து மீது கார் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதைத்தொடர்ந்து, அவர்களது உறவினர்கள் காரும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின.
இதில் அருள்ஜோதி பாக்கியராணி, பென்னி அன்பரசு மற்றும் அவரது உறவினர்கள் யூனிஷ் அன்புராணி, ஆனிஜாய் பேட்ரிக், ஜெரோம், கியூடிஸ் ஆகிய 6 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு, காரைக்கால் அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், அருள்ஜோதி பாக்கியராணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பென்னி அன்பரசு உள்ளிட்ட 5 பேரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து திருப்பட்டினம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மர்த்தினி, உதவி ஆய்வாளர்  முத்துசாமி மற்றும் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.