
கேரளத்துக்கு நிவாரண பொருள்கள் அனுப்பி வைப்பு
கேரள வெள்ள நிவாரணமாக காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் சேகரிக்கப்பட்ட பொருள்கள் புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.
கேரள வெள்ள நிவாரணமாக காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் சேகரிக்கப்பட்ட பொருள்கள் புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.
கேரளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காரைக்கால் மாவட்ட பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர், நிறுவனத்தினர் நிதியுதவி மற்றும் பொருள்கள் அளித்து உதவ மாவட்ட நிர்வாகம் கோரிக்கை விடுத்தது. அதன்படி, என்எஸ்எஸ்., என்சிசி உள்ளிட்ட மாணவர் அமைப்பினர் உண்டியல் ஏந்தி பொதுமக்களிடம் நிதி சேகரித்து மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். தனிநபர்கள் மற்றும் கிராம பஞ்சாயத்துகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் ஆட்சியரிடம் நிதி அளித்தனர்.
இதுதவிர, அரிசி, கோதுமை, நூடுல்ஸ், ரொட்டி, ரஸ்க், பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்கள் மற்றும் தீப்பெட்டி, மெழுகுவர்த்தி, பற்பசை, துணி, மருந்துகள், குடிநீர் புட்டிகள் ஏராளமானவை பல்வேறு அமைப்பினரால் மாவட்ட ஆட்சியரகத்தில் வழங்கப்பட்டது. இவற்றை காரைக்காலில் இருந்து ரயில் மூலம் கேரளத்துக்கு அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ரயில் நிலையத்துக்கு கொண்டு செல்லும் வாகனங்களை புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன், சார்பு ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாவட்ட நிர்வாகத்தால் சேகரிக்கப்பட்ட நிதி, புதுச்சேரிக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அங்கு சேகரிக்கப்படும் நிவாரண நிதியில் சேர்க்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






