ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

அரசு மருத்துவமனை தரம் உயர்த்தும் பணியை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தல்

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை தரம் உயர்த்தும் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை தரம் உயர்த்தும் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் போராளிகள் குழு பிரதிநிதிகள், காரைக்கால் ஆட்சியரகத்தில் வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன், மாவட் ஆட்சியர் ஆர். கேசவன் ஆகியோரை செவ்வாய்க்கிழமை சந்தித்து அளித்த கோரிக்கை மனு விவரம் :
காரைக்கால் அரசு மருத்துவமனையை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாகத் தரம் உயர்த்த வேண்டும். இதற்கான பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். காரைக்கால் வளர்ச்சித் திட்டப் பணிகளில் மருத்துவமனைக்கு முக்கியத்துவம் தர வேண்டும். காரைக்காலில் குடிநீரில் புழு இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதை உரிய முறையில் ஆய்வு செய்து தரமான குடிநீர் வழங்க வேண்டும். காரைக்காலில் புதிதாக நடைபெற்று வரும் குடிநீர் குழாய் பதிப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
காரைக்கால் நகர சாலைகள், தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்கு முக்கிய காரணிகளாக குதிரை, நாய், மாடு, பன்றிகள் உள்ளன. இதை கட்டுப்படுத்த நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகங்கள் சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கஜா புயல் நிவாரண நிதி முறையாக மக்களுக்கு போய் சேரவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் சரியான வகையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இலவச அரிசி வழங்கல் திட்டத்தில், அரிசிக்கு பதிலாக பணமாக வங்கிக் கணக்கில் சேர்க்கும் முறையை கைவிட்டு, வழக்கம்போல ரேஷன் கடைகள் மூலம் அரிசியாகவே தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காரைக்கால் நகரப் பகுதியிலும் உள்புறத்திலும் 90 சதவீத சாலைகள் சிதிலமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன. உரிய நிதியை போர்க்கால வகையில் ஒதுக்கி, சாலைகளை புதுப்பிக்க பொதுப் பணித் துறை நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காரைக்கால் ஆட்சிரகப் பகுதியில் 144 தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கிறது. ஜனநாயக ரீதியில் இந்த பகுதியில் போராட்டங்கள் நடத்த இதனால் அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே, மக்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் தடை உத்தரவை முழுமையாக விலக்கிக்கொள்ள மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர், ஆட்சியரை சந்தித்து இந்த பிரச்னைகள் குறித்து விரிவாக எடுத்துக்கூறியதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்ததாக போராளிகள் குழு பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.