கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிதமிழக மீனவர்கள் தொடர் கைது: தீர்வுகாண அமைச்சர் ஸ்ரீநாத் தில்லி பயணம்சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

சாலைப் பணி: எம்.எல்.ஏ. ஆய்வு

திருப்பட்டினத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்படும் சாலைப் பணியை சட்டப் பேரவை உறுப்பினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

திருப்பட்டினத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்படும் சாலைப் பணியை சட்டப் பேரவை உறுப்பினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
திருப்பட்டினம் பகுதி காஜியார் வீதி, வெள்ளக்குளம் வீதியில் சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள நிரவி - திருப்பட்டினம் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 10.09 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணி தொடங்கப்பட்டது. ஏறக்குறைய 50 சதவீதப் பணிகள் நடந்து வந்தபோது, மழையால் சாலைப் பணிகள் மேற்கொள்வதில் தடங்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம், சாலைப் பணியை தற்போது தொடங்கி செய்து வருகிறது. பணியை நேரில் பார்வையிடுவதற்காக சட்டப் பேரவை உறுப்பினரும், புதுச்சேரி மின் திறல் குழுமத் தலைவருமான கீதாஆனந்தன் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுடன் சென்றார்.
ஆணையர் ஜான் அரேலியஸ் மற்றும் பொறியாளர் குழுவினர், சாலைப் பணியின் தற்போதைய நிலவரம் குறித்தும், திட்டப் பணிக்கு 4 மாத காலம் இலக்கு நிர்ணயித்திருப்பது குறித்தும் விளக்கினர். இதுவரை செய்த பணிகளுக்கு அடுத்தபடியாக மேலும் ஜல்லிகள் கொட்டப்பட்டு தார்ச் சாலையாக மாற்றம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஜனவரி மாத இறுதிக்குள் பணிகளை நிறைவு பெறும் வகையில் பணிகளை விரைவாக மேற்கொண்டு வருவதாக பேரவை உறுப்பினருக்கு தெரிவித்தனர்.
சாலைப் பணிகள் உரிய தரத்துடன் இருக்க வேண்டும். பணிகள் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் கண்காணிப்பில் நடக்க வேண்டும் என பேரவை உறுப்பினர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், காலம் எடுத்துக்கொள்ளாமல் குறிப்பிட்ட காலத்தில் பணிகளை முடிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.