பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

மாங்கனித் திருவிழா: கூடுதலான போலீஸார் கண்காணிப்பால் கட்டுப்பட்ட சமூக விரோதச் செயல்கள்

முன்னெப்போதும் இல்லாத வகையில் மாங்கனித் திருவிழாவில் புதுச்சேரியிலிருந்து காவலர்கள் வந்ததும், கண்காணிப்பில்

Updated On :29 ஜூன் 2018, 1:02 am IST

முன்னெப்போதும் இல்லாத வகையில் மாங்கனித் திருவிழாவில் புதுச்சேரியிலிருந்து காவலர்கள் வந்ததும், கண்காணிப்பில் கூடுதல் போலீஸார் ஈடுபட்டிருந்ததும்,  வழிப்பறி, திருட்டு, கேலி போன்ற சமூக விரோதச் செயல்கள் கட்டுக்குள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
காரைக்காலில் கடந்த 26-ஆம் தேதி அம்மையார் திருக்கல்யாணமும், 27-ஆம் தேதி பிச்சாண்டவர் வீதியுலா, இரவு அமுதுபடையல் ஆகிய நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். 
பக்தர்கள் தங்களது ஆபரணங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்குமாறும், குழந்தைகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்குமாறும் ஆங்காங்கே ஒலிபெருக்கி வாயிலாக கூறிக்கொண்டிருந்தாலும், மறுபுறம் வழிப்பறி, குழந்தைகளை தவறவிடுவது போன்றவை நடந்தவாறு இருக்கும். நிகழாண்டு காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால், சிறப்பு கவனம் செலுத்தி புதுச்சேரி மாநில காவல்துறைத் தலைவரிடம் பேசி புதுச்சேரியிலிருந்து கூடுதலான மகளிர் போலீஸார் உள்ளிட்ட காவலர்களை காரைக்காலுக்கு வரவழைத்தார்.
ஏறக்குறைய 400 போலீஸார் கண்காணிப்பு மற்றும் பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணி, போக்குவரத்து ஸ்தம்பிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
முந்தைய ஆண்டுகளில் நடந்த மாங்கனித் திருவிழாவில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்று, எந்தெந்த பகுதியில் பக்தர்கள் அதிகமாக கூடுவார்கள், எவ்வாறான பாதுகாப்புப் பணி அளிக்கவேண்டும் என்பது குறித்து ஒவ்வொரு காவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
 பிச்சாண்டவர் புறப்பாட்டைப் பொருத்தவரை 27-ஆம் தேதி காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை  எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே இருந்தது. பக்தர்களிடையே போலீஸாரும் அதிகமாக இருந்ததால், வழிப்பறி சம்பவங்கள் வெகுவாக நடைபெறவில்லை. 2 இடங்களில் வழிப்பறி முயற்சி நடந்தது. வழிப்பறி செய்யும் திட்டத்தில் பக்தர்களோடு சேர்ந்திருந்த கும்பல், பக்தர்கள் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயற்சித்தபோது, இதனை அருகிலிருந்து கண்காணித்துக்கொண்டிருந்த போலீஸார்,  அவர்களை மடக்கிப் பிடித்தனர்.
கூடுதலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததே இதுபோன்ற தடுப்பு செயலை செய்யமுடிந்தது. வழிப்பறி, பெண்களை கிண்டல் செய்யும் கும்பல் போன்றோரின் செயல்பாடுகள் பெருமளவு கட்டுப்பாட்டில் இருந்தன.
காரைக்கால் காவல்நிலையத்தைப் பொருத்தவரை வழிப்பறி, திருட்டு போன்ற புகார்கள் வரவில்லை என தெரிவித்தனர். 
ஜூலை மாதம் 27-ஆம் தேதி மாங்கனித் திருவிழா விடையாற்றி நடைபெறவுள்ளது. அதுவரை திருவிழா கடைகள் செயல்பாட்டில் இருக்கும். 
நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் திருவிழா கடைப் பகுதியில் குவிவார்கள். பிரதான போக்குவரத்துள்ள பாரதியார் சாலையில் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து குறிப்பிட்ட பகுதியில் தடை செய்யப்படும். மாற்று சாலைகளில் போக்குவரத்து திருப்பிவிடப்படும். இதனால் அங்கு போக்குவரத்து ஸ்தம்பிக்கும் சூழல் உருவாகும்.
திருவிழா நடைபெற்ற 2 நாளிலும் போலீஸார் எவ்வாறு பணி செய்தார்களோ, உள்ளூர்  போலீஸார் ஜூலை 27-ஆம் தேதி வரை சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பிக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கையை எடுக்கவேண்டும். 
இந்த விவகாரத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் கவனம் செலுத்தவேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.