பங்குனி உத்திர பிரமோத்ஸவத்தையொட்டி காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தினமும் சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேசுவரர் பஞ்சமூர்த்திகளாக பல்வேறு வாகனங்களில் மாட வீதி புறப்பாடு நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீ நீலோத்பாலாம்பாள் சமேத ஸ்ரீ சந்திரசேகரர் வீற்றிருந்த தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி காலை 9.30 மணியளவில் நடைபெற்றது. கோயில் நான்கு வீதிகளின் வழியே சென்று அம்மையார் கோயில் அருகே உள்ள தேர்நிலையை மாலை சென்றடைந்தது.
தேரோட்டத்தில் காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா, மாவட்ட சார்பு ஆட்சியரும் கோயில்கள் நிர்வாக அலுவலருமான ஏ.விக்ராந்த் ராஜா, வடக்கு மண்டல
காவல் கண்காணிப்பாளர் மாரிமுத்து, கோயில் அறங்காவல் குழு நிர்வாகிகள் ஆர்.கேசவன், டி.ஆறுமுகம், எம்.பக்கிரிசாமி, டி.ரஞ்சன், கே.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தீர்த்தவாரி நிகழ்ச்சி : வெள்ளிக்கிழமை பகல் 12 மணியளவில் அம்மையார் குளத்தில் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகளும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு தெப்போத்ஸவம் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறதா தவெக?

5 மாநில பேரவைத் தேர்தல்கள்! கருத்துக் கணிப்பு முடிவுகள் - உடனுக்குடன்!

4ஆவது முறையாக தொடக்க வீரர்களில் மாற்றம் செய்த மும்பை இந்தியன்ஸ்..! 2012 சீசன் திரும்புகிறதா?

வெயிலால் வியாபாரம் குறைவு! டீக்கடை உரிமையாளர் செய்த Tech Update! | Summer
வீடியோக்கள்

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு

