
காரைக்காலில் நாளை காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்
காரைக்காலில் சனிக்கிழமை (செப்.15) காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
காரைக்காலில் சனிக்கிழமை (செப்.15) காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் தலைமையில் காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், சனிக்கிழமை நடைபெறவுள்ள காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் குறித்தும், மாவட்டத்தின் அனைத்து பகுதியிலிருந்து கட்சியினர் திரளாக கலந்துகொள்ளவேண்டியதன் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்துக்குப்பின் அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் கூறியது: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் சனிக்கிழமை காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. காலை நிகழ்வாக புதுச்சேரியிலும், மாலை நிகழ்வாக காரைக்காலிலும் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் புதுச்சேரிக்கான காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் முகுல் வாஸ்னிக், புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி, புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஏ. நமச்சிவாயம் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். பிரான்ஸ் நாட்டிலிருந்து ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் உள்ள ஊழல் குறித்தும், அரசுக்கு ஏற்பட்ட பெரும் இழப்பு குறித்தும் கட்சியின் செயல்வீரர்களிடையே விளக்கும் வகையில் இக்கூட்டம் நடைபெறுகிறது. மேலும், மத்திய பாஜக அரசின் தவறான நடவடிக்கையினால் நாட்டு மக்கள் அடைந்துவரும் துன்பங்கள் குறித்தும் விளக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் மக்களிடையே செயல்வீரர்கள் கொண்டு சேர்க்கும் விதத்தில் சிறந்த கருத்துகளை தலைவர்கள் விளக்கிப் பேசவுள்ளனர் என்றார் அமைச்சர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







