காரைக்காலில் 2 நாள்களாக நடைபெற்ற தட்டச்சு இளநிலை, முதுநிலை, அதிவேகம் ஆகிய பிரிவில் 400 பேர் பங்கேற்றனர்.
தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வித் துறை சார்பில் தமிழகம், புதுவையில் பிப்ரவரி 23, 24-ஆம் தேதிகளில் தட்டச்சுத் தேர்வு நடைபெற்றது. காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த தட்டச்சுப் பயிற்சியாளர்கள் நாகை மாவட்டத்தில் நடந்த தேர்வு மையத்தில் பங்கேற்றுவந்தனர்.
கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் காரைக்கால் மாவட்டம், ராயன்பாளையத்தில் உள்ள காரைக்கால் தொழில்நுட்பக் கல்லூரியை மையமாக தமிழக தொழில்நுட்பக் கல்வித் துறை அங்கீகரித்தது.
இதன்படி, 2-ஆவது முறையாக காரைக்கால் தொழில்நுட்பக் கல்லூரியில் சனி, ஞாயிற்றுக்கிழமையில் தட்டச்சு இளநிலை, முதுநிலை, அதிவேகம் ஆகிய பிரிவுகளில் நடைபெற்ற தேர்வில் 400 மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். முதல் நாள் சனிக்கிழமை 5 பிரிவுகளாகவும், 2-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 5 பிரிவுகளாகவும் தேர்வுகள் நடத்தப்பட்டன. இளநிலைக்கு முதல் தாள் தேர்வு 10 நிமிடமும், 2-ஆம் தாள் தேர்வு 45 நிமிடமும் நடைபெற்றது.
முதுநிலைக்கு முதல் தாள் தேர்வு 10 நிமிடமும், 2-ஆம் தாள் தேர்வு 1 மணி நேரமும் நடைபெற்றது. அதிவேகத் தேர்வில் பங்கேற்றோருக்கு மொத்தமாக 10 நிமிடம் தரப்பட்டது.
இந்த தேர்வு ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் நடைபெற்றது. காரைக்கால் தேர்வு மையத்தின் தலைமை கண்காணிப்பாளராக காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டி.சந்தனசாமி, உதவி கண்காணிப்பாளராக விரிவுரையாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் தேர்வு உதவியாளராக 6 பேர் பணியமர்த்தப்பட்டிருந்தனர். காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த தேர்வு நடைபெற்றது.
விடைத்தாள்கள் சீல் வைக்கப்பட்டு சென்னை மண்டல அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்படும் என தேர்வுக்கூட கண்காணிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரே நாளில் 11 லட்சம் பேர்! அதிகரித்த முதல்வர் அலுவலக இன்ஸ்டா பின்தொடர்வோர்!

பேரவைத் தலைவரை கரம்பிடித்து அமரவைக்கும் சம்பிரதாயம் வந்தது எப்படி? முதல்வர் விஜய் பகிர்ந்த சுவாரசியம்!!

அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை: C.V. Shanmugam | ADMK

மே 3-ல் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து!
விடியோக்கள்

அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை: C.V. Shanmugam | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை
