நிரவி கொம்யூனுக்குள்பட்ட பல்வேறு கிராமப்புற சாலைகள் ரூ. 26 லட்சத்தில் மேம்படுத்தும் பணி திங்கள்கிழமை
தொடங்கப்பட்டது.
காரைக்கால் மாவட்டம், நிரவி - திருப்பட்டினம் தொகுதிக்குள்பட்ட நிரவி கொம்யூனில் பல்வேறு கிராமப்புற சாலைகள் சிதிலமடைந்திருப்பதாகவும், சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரிடம் கிராமத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
இவற்றில் நிரவி கொம்யூனில் மூன்று பகுதிகளில் சாலைகளை மேம்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவை உறுப்பினரும், புதுச்சேரி மின் திறல் குழுமத் தலைவருமான கீதாஆனந்தன் கலந்துகொண்டு, பணிகளை தொடங்கிவைத்தார். மானாம்பேட்டை சாலை ரூ.10.78 லட்சத்திலும், விழிதியூர் கிராமம் முதலியார் தெரு சாலை ரூ.8.18 லட்சத்திலும் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (2016-2017) மேம்படுத்தப்படுகிறது.
இதேபோல், நிரவி புதுமனைத் தெரு முதல் கருணைபக்கிரி தெரு வரை ரூ.7.03 லட்சத்தில் சாலையை மேம்படுத்த 2017-2018- ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டப்பணிகள் 4 முதல் 6 மாத காலத்திற்குள் நிறைவடைந்துவிடும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பூமி பூஜை நிகழ்ச்சியில் உள்ளாட்சித் துறை துணை இயக்குநர் எஸ்.பாஸ்கரன், நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் என்.ரவி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு பகுதியை முற்றுகையிட சென்ற விவசாயிகள் கர்நாடக எல்லையில் தடுத்து நிறுத்தம்!

தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை! அமைச்சர் நிர்மல் குமார் பதில்
இந்தியாவின் சொர்க்கப் பறவை
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நாவறட்சி தணிய...!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


