குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பிரதமரின் மனதின் குரல் உரை: ஆர்வத்துடன் கேட்ட பாஜகவினர்

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வானொலி வாயிலாக ஆற்றிய மனதின் குரல் உரையை காரைக்காலில் பாஜகவினர் ஆர்வத்துடன் கேட்டனர்.

Updated On :25 பிப்ரவரி 2019, 6:30 am IST

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வானொலி வாயிலாக ஆற்றிய மனதின் குரல் உரையை காரைக்காலில் பாஜகவினர் ஆர்வத்துடன் கேட்டனர்.
பிரதமர் நரேந்திரமோடி அகில இந்திய வானொலி மூலம் ஒவ்வொரு மாதமும் "மன் கி பாத்' (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். இதற்கென புதுச்சேரி மாநிலத்தில் பாஜக சார்பில் மன் கி பாத் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். புதுச்சேரி மாநில பாஜக செயலரும், மாநில மன் கி பாத் பொறுப்பாளருமான எம்.அருள்முருகன், மாவட்டத் தலைவர் டி.கே.எஸ்.எம்.மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோர் காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதி அலுவலகத்தில் பிரதமரின் மன் கி பாத் உரையை ஞாயிற்றுக்கிழமை பகல் 11 மணிக்கு கேட்டனர்.
இதைத்தொடர்ந்து, எம். அருள்முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பிரதமரின் வானொலி உரை வாயிலாக பாஜக அரசு கடந்த 5 ஆண்டுகளில் எவ்வாறெல்லாம் பாடுபட்டுள்ளது என்பது புரிந்துகொள்ள முடியும். மன் கி பாத் பொறுப்பாளர் என்ற முறையில் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து, பிரதமர் உரை முடிந்ததும் வரவேற்பு செய்திகள் வந்துகொண்டிருப்பது பெருமையாக உள்ளது. 
பாஜகவினர் தேர்தல் பணிகளில் மிகுந்த உற்சாகமாக இருந்தாலும், பிரதமரின் இந்த உரை மேலும் அவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும். மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் பாஜக சிறப்பான வெற்றியைப் பெறும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.