இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

நவீன முறையில் வாகனங்களுக்கு ஆயில் மாற்றும் புதிய முறை அறிமுகம்

நிரவி அருகே உள்ள ஐ.ஓ.சி. பெட்ரோல் பங்க்கில் நவீன முறையில் வாகனங்களுக்கு ஆயில் மாற்றும் பிரிவு தொடங்கப்பட்டது.

Updated On :24 ஜனவரி 2019, 1:28 am IST

நிரவி அருகே உள்ள ஐ.ஓ.சி. பெட்ரோல் பங்க்கில் நவீன முறையில் வாகனங்களுக்கு ஆயில் மாற்றும் பிரிவு தொடங்கப்பட்டது.
காரைக்கால் மாவட்டம், நிரவி ஓ.என்.ஜி.சி. பேருந்து நிறுத்தம் அருகே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் டீலரான சாரதி ஏஜென்சீஸ் பெட்ரோல் பங்க்கில்,  சர்வோ எக்ஸ்பிரஸ் மூலம் நவீன முறையில் வாகனங்களுக்கு ஆயில் மாற்றி தரும் பிரிவு செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
பங்க் டீலர் பா. குணசீலன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  இந்தியன் ஆயில் நிறுவன துணைப் பொதுமேலாளர் ஏ.எம்.சந்தோஷ்குமார், உயர்நிலை விற்பனை அதிகாரி சிவமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பிரிவைத் திறந்துவைத்தனர். 
நிகழ்ச்சியில், சர்வோ டி.ஆர்.வி.4  கிராஃப்ட் ஆயில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மையம் திறப்பு குறித்து பா. குணசீலன் கூறும்போது, சர்வோ சார்பில் பங்கில் 5 நிமிடத்தில் வாகனங்களுக்கு ஆயில் மாற்றி தரும் வகையில் இயந்திரத்துடன் தனிப் பிரிவு அமைத்து தரப்பட்டது. வாகனங்களில் உள்ள எண்ணெய் 3 நிமிடத்தில் பம்ப் செய்து வெளியேற்றப்பட்டு புதிதாக எண்ணெய் நிரப்பப்படும்.
இந்த வசதி வாகனதாரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.