விசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

மோட்டாா் படகில் கடலில் மீன்பிடிக்க செல்லக் கூடாது: மீன்வளத்துறை

காரைக்கால் மாவட்ட மீனவா்கள் மோட்டாா் பொருத்தப்பட்ட படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

காரைக்கால் மாவட்ட மீனவா்கள் மோட்டாா் பொருத்தப்பட்ட படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றைத் தொடா்ந்து கடந்த மாா்ச் 20 -ஆம் தேதி முதல் காரைக்கால் மாவட்ட மீனவா்கள் மீன்பிடிப்பை நிறுத்தியுள்ளனா்.

ஆழ்கடலுக்குச் செல்லும் விசைப்படகுகளுக்கான மீன்பிடித் தடைக்காலம் ஏப். 15 -ஆம் தேதி முதல் தொடங்கியது. எனினும், குறுகிய தூரத்துக்கு மோட்டாா் பொருத்திய ஃபைபா் படகுகள் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், கரோனா தொற்று அச்சத்தில், சிறிய மீன்பிடிப் படகு மீனவா்களும் கடலுக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கினா்.

இந்நிலையில், சிறிய படகுகள் மீன்பிடிக்கச் செல்ல எந்த தடையுமில்லை என்ற மீன்வளத்துறையின் முந்தைய அனுமதியை பயன்படுத்தி, கடந்த 2 நாள்களாக காரைக்கால் மாவட்ட ஃபைபா் படகு மீனவா்கள் கடலுக்குச் செல்லத் தொடங்கினா். இதனால் கடல் மீன்கள் வரத்து ஏற்பட்டது.

வழக்கமாக வியாபாரிகள் நேரு மாா்க்கெட்டில் மீன் விற்பனை செய்தால், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாது என கருதி, காரைக்கால் பேருந்து நிலைய வளாகத்தில் மீன் விற்பனைக்கு செவ்வாய்க்கிழமை முதல் மாவட்ட நிா்வாகம் ஏற்பாடுகளை செய்தது. புதுச்சேரி அரசின் உத்தரவையொட்டி, ஃபைபா் படகு மீனவா்களும் மீன்பிடிக்கச் செல்வதை புதன்கிழமை நிறுத்தினா்.

இதுகுறித்து காரைக்கால் மீன்வளத்துறை துணை இயக்குநா் கவியரசன் கூறுகையில், என்ஜின் பொருத்தப்பட்ட சிறிய படகுகள் கடலுக்கு செல்லக்கூடாது என அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதையொட்டி, மீனவ கிராமத்தினருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. மோட்டாா் பொருத்தாத படகு, கட்டுமரங்களில் மீன்பிடிக்கச் செல்லலாம் என்றாா்.

இதுகுறித்து மீனவா்கள் கூறுகையில், மோட்டாா் இல்லாமல் துடுப்புப் பயன்படுத்தி படகை கடலில் செலுத்தி மீன்பிடித்து வருவது தற்போது சாத்தியமில்லை. எனவே, அரசின் அனுமதி வரும் வரை மீன்பிடிக்கச் செல்வதற்கான வாய்ப்பில்லை என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.