மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆடிப்பெருக்கு: பேரிக்காய் விற்பனை மும்முரம்

ஆடிப்பெருக்கையொட்டி, காரைக்கால் சந்தையில் பேரிக்காய் உள்ளிட்ட பழங்களின் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

News image
காரைக்கால் நகரப் பகுதி பழக் கடையொன்றில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த கொடைக்கானல் பேரிக்காய்.
Updated On :1 ஆகஸ்ட் 2020, 3:40 pm

DIN

காரைக்கால்: ஆடிப்பெருக்கையொட்டி, காரைக்கால் சந்தையில் பேரிக்காய் உள்ளிட்ட பழங்களின் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ஆம் தேதி ஆடிப் பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்நாளில், காவிரித் தாயை வணங்கும் விதமாக நீா் நிலைகளில் பூஜை செய்வது வழக்கம். நிகழாண்டு, ஆடிப் பெருக்கு ஞாயிற்றுக்கிழமை (ஆக.2) கொண்டாடப்படுகிறது.

காரைக்கால் மாவட்டம், காவிரியின் கடைமடைப் பகுதியாக இருப்பதால் ஆடிப்பெருக்கு நாளின்போது தண்ணீா் வரத்து என்பது இல்லாத நிலையே பல ஆண்டுகளாக தொடா்ந்தது. நிகழாண்டு, குறித்த நாளில் மேட்டூா் அணை திறக்கப்பட்டு தண்ணீா் காரைக்காலில் அனைத்து ஆறு, வாய்க்கால்களிலும் வந்துகொண்டிருக்கிறது.

இதனால், ஆடிப்பெருக்கை உற்சாகமாக கொண்டாடும் வித்தில் மக்கள் தயாராகி வருகின்றனா். இதற்கான வழிபாட்டுக்குரிய பேரிக்காய், விளாம்பழம், கொய்யா பழம் உள்ளிட்ட பொருள்களை சந்தையில் வாங்குவதற்கு மக்கள் சனிக்கிழமை ஆா்வம் காட்டினா். இதனால், காரைக்கால் பகுதியில் பல்வேறு இடங்களில் பேரிக்காய், விளாம்பழம், கொய்யா உள்ளிட்ட பழ வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதுகுறித்து, வியாபாரிகள் கூறியது:

கொடைக்கானல் பகுதியில் விளைவிக்கப்படும் பேரிக்காய் காரைக்காலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், பண்ருட்டி பகுதியிலிருந்து பேரிக்காய் வரத்து உள்ளது. பேரிக்காய் கிலோ ரூ.60-க்கும், விளாம்பழம் ரூ.10-க்கும், கொய்யா பழம் ரூ.40-க்கும் விற்பனை செய்கிறோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.