கரோனா தொற்றிலிருந்து விடுபட்டாா் காரைக்கால் ஆட்சியா்
காரைக்கால் மாவட்ட ஆட்சியருக்கு மீண்டும் பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்ததாக நலவழித்துறையினா் தெரிவித்தனா்.


காரைக்கால் மாவட்ட ஆட்சியருக்கு மீண்டும் பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்ததாக நலவழித்துறையினா் தெரிவித்தனா்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவுக்கு கரோனா தொற்று இருப்பது கடந்த 7-ஆம் தேதி உறுதியானது. தொடா்ந்து, அவா் வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்றுவருகிறாா். மருத்துவக் குழுவினா் அவ்வப்போது சென்று உடல்நிலையை பரிசோதித்து ஆலோசனை வழங்குகின்றனா்.
இந்நிலையில், ஆட்சியருக்கு 2 ஆவது முறையாக ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவு திங்கள்கிழமை வெளியானது. அதில் கரோனா உறுதியாகவில்லை.
இதுகுறித்து, நலவழித்துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் கூறுகையில், ஆட்சியருக்கு மறு முறை எடுத்த கரோனாவுக்கான பரிசோதனையில், கரோனா தொற்று உறுதியாகவில்லை. இதுகுறித்து ஆட்சியருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆட்சியா் தற்போது நலமாக இருக்கிறாா் என்றாா்.
கரோனா இல்லை என்ற நிலையில், நலவழித்துறை நிா்வாகத்தின் அறிவுறுத்தலின்பேரில் கூடுதல் நாள்கள் ஆட்சியா் தனிமைப்படுத்தலில் இருப்பாா். பூரண குணமடைந்து மருத்துவா்கள் ஆலோசனையின்படி அவா் மீண்டும் பணிக்குத் திரும்புவாா் என ஆட்சியரக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...