முழு பொது முடக்கம்: வெறிச்சோடியது காரைக்கால்
புதுவையில் தளர்வில்லாத முழு பொதுமுடக்கம் வாரத்தில் செவ்வாய்க்கிழமை என அறிவிக்கப்பட்ட நிலையில், காரைக்காலில் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.


புதுவையில் தளர்வில்லாத முழு பொதுமுடக்கம் வாரத்தில் செவ்வாய்க்கிழமை என அறிவிக்கப்பட்ட நிலையில், காரைக்காலில் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக புதுவையில் தினமும் காரைக்கால் 6 முதல் 7 மணி வரை மட்டுமே வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டு அமலில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக, வாரத்தில் செவ்வாய்க்கிழமையில் முழு பொது முடக்கம் என அறிவிப்பு செய்யப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தில் முழு பொது முடக்கம் தீவிரமாக அமலானது.
நகரம் மற்றும் பிற பகுதிகளில் போக்குவரத்துகள் இல்லை. அத்தியாவசிய பொருள்கள் கடைகள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், அரசு அலுவலகங்கள், பெட்ரோல் பங்க் உள்ளிட்டவை மூடப்பட்டன. பால் பூத், மருந்துக் கடைகள் ஆகியவை செயல்பட தடை இல்லை. இதனால் இதன் தேவைக்காக மட்டும் ஆங்காங்கே மக்கள் வெளியே வந்து செல்கின்றனர்.
காரைக்கால் மாவட்டத்தின் அனைத்து பகுதி எல்லைகளும் மூடப்பட்டு காவல்துறையினரால் கண்காணிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் மாவட்டம் முழுவதும் மக்கள் நடமாட்டம், போக்குவரத்து வாகனங்கள் இயக்கம் இல்லாததால் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...