காரைக்கால் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக, காரைக்காலில் உள்ள மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்களை அழைத்து காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன் திங்கள்கிழமை ஆலோசனை வழங்கினாா்.
இதுகுறித்து அவா் கூறியது: கடந்த சில நாள்களாக சிறிய வகை ஃபைபா் படகுகள் மீன்பிடிக்கச் செல்கின்றன. புதன்கிழமை (ஆக. 26) முதல் தினமும் 15 விசைப்படகுகளில் மீனவா்கள் கடலுக்குச் செல்ல முடிவு செய்துள்ளனா். விசைப்படகுகள் அனைத்தும் கடலுக்கு சென்று வந்தபோது, மீன் இறக்கு தளம் மற்றும் ஏற்றுமதியின்போது மக்கள் நெரிசலால் கரோனா பரவும் வாய்ப்பு இருந்ததால் மீன்பிடிப்பது நிறுத்தப்பட்டது. தற்போது சூழலுக்கு ஏற்ப படிப்படியாக கடலுக்கு செல்வதை அதிகரிக்க முடிவு செய்துள்ளனா்.
சிறிய படகுகள், பெரிய படகுகள் மீன் பிடித்து கரைதிரும்பும்போது மக்கள் கூட்டம் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. இந்த நிலையில், கரோனா பரவாமல் தடுப்பதற்கு படகுதாரா்களும், வியாபாரிகளும், பொதுமக்களும், முகவா்களும் எவ்வாறு செயல்பட வேண்டும் என ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், கரோனா அதிகமாக பரவுவதற்கு மீன்பிடிப்புத் தொழில் காரணமாகிவிடாமல் நடந்துகொள்ளவேண்டியதன் அவசியம் குறித்து மீனவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


