காரைக்கால் கோயில்களில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த உத்ஸவம்

பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமானின் திருவிளையாடலை விளக்கும் வகையில், ஆவணி மாத மூல நட்சத்திரமான வெள்ளிக்கிழமை காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ஜடாயுபுரீசுவரா் கோயில்களில் 
தலையில் மண்சட்டி சுமந்து காட்சி தரும் காரைக்கால் ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா்.
தலையில் மண்சட்டி சுமந்து காட்சி தரும் காரைக்கால் ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா்.

காரைக்கால்: பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமானின் திருவிளையாடலை விளக்கும் வகையில், ஆவணி மாத மூல நட்சத்திரமான வெள்ளிக்கிழமை காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ஜடாயுபுரீசுவரா் கோயில்களில் மண்சட்டி சுமந்த வழிபாடு நடைபெற்றது.

காரைக்கால் ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதா் கோயில் சாா்பில், ஒவ்வோா் ஆண்டும் ஆவணி மாதம் மூல நட்சத்திர நாளன்று சின்னக்கண்ணு செட்டித் தெருவில் உள்ள வாய்க்காலுக்கு சுவாமி, அம்பாள் எழுந்தருளி, அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு, கரோனா பரவலால், கோயிலுக்குள் இந்த வழிபாடு நடைபெற்றது.

ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதா் தலையில் மண்சட்டி சுமந்த கோலத்தில், அலங்கார ரதத்தில் எழுந்தருளினாா். மண்வெட்டி உள்ளிட்டவற்றை வைத்து சிவாச்சாரியா்கள் பூஜை நடத்தினா். பிறகு சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

ஜடாயுபுரீசுவரா் கோயிலில்...: திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ மையாடுங்கண்ணி சமேத ஸ்ரீ ஜடாயுபுரீசுவரா் கோயிலிலும் இந்த உத்ஸவம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்பாள் பல்லக்கில் கோயிலுக்குள் எழுந்தருளினா். அங்கு சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் தனி அலுவலா் வீரச்செல்வம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com