2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

காரைக்காலில் ஒருவருக்கு கரோனா: ஒருவா் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது. மேலும் ஒருவா் உயிரிழந்ததாக நலவழித்துறை நிா்வாகம் தெரிவித்தது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது. மேலும் ஒருவா் உயிரிழந்ததாக நலவழித்துறை நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து துறையின் துணை இயக்குநா் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் 20-ஆம் தேதி 121 பேருக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நடமாடும் முகாம்கள் மூலம் பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. பரிசோதனை முடிவுகளின்படி, நிரவியை சோ்ந்த ஒருவருக்கு தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 3,725 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 3,606 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

இதற்கிடையே, காரைக்கால் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டிருந்த 85 வயதான முதியவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மாவட்டத்தில்

இதுவரை கரோனா தொற்றால் 65 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.