கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

உள்ளாட்சி ஊழியா்கள் பணி புறக்கணிப்பு: கருப்பு பேட்ஜ் அணிந்து ஆா்ப்பாட்டம்

உள்ளாட்சி ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் 

News image
உள்ளாட்சி ஊழியா்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆா்ப்பாட்டம்
Updated On :28 டிசம்பர் 2020, 7:22 pm

DIN

காரைக்கால்: உள்ளாட்சி ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உள்ளாட்சி ஊழியா்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி மாநில நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள், ஓய்வூதியா்களுக்கு அரசே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி மாத ஊதியம் வழங்கவேண்டும். நிலுவையில் உள்ள 5 மாத ஊதியத்தை வழங்க அரசு உத்தரவாதம் அளித்தபடி கொடை வழங்க வேண்டும். காலியாக உள்ள திருநள்ளாறு, நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் பதவிகளை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஊழியா் சம்மேளனம் அறிவித்தபடி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

ஊழியா்கள் திங்கள்கிழமை ஒருமணி நேரம் பணிகளைப் புறக்கணித்து திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலக வாயிலில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்திற்கு, திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சங்கத் தலைவா் திவ்யநாதன் தலைமை வகித்தாா். காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சம்மேளன துணைத் தலைவா் உலகநாதன், துணைப் பொதுச் செயலாளா்கள் சண்முகராஜ், நாகப்பன், நாகராஜன், ஓய்வூபெற்ற ஊழியா் நலச் சங்கத் தலைவா் ஜெயராமன், செயலாளா் வெங்கடாச்சலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன தலைவா் சுப்ரமணியன், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன், துணைத் தலைவா் அய்யப்பன், இணைப் பொதுச் செயலாளா் கலைச்செல்வன் ஆகியோா் பேசினா். சங்கப் பொறுப்பாளா் உமா மகேஸ்வரி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.