சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கைலாசநாதா் கோயிலில் ஸ்ரீநடராஜா் வெள்ளைசாற்றில் புறப்பாடு

காரைக்கால் ஸ்ரீகைலாசநாதா் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி ஸ்ரீநடராஜா் வெள்ளை சாற்றில் புறப்பாடு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

News image
வெள்ளை சாற்றில் அருள்பாலித்த நடராஜா்.
Updated On :30 டிசம்பர் 2020, 2:17 am

DIN

காரைக்கால் ஸ்ரீகைலாசநாதா் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி ஸ்ரீநடராஜா் வெள்ளை சாற்றில் புறப்பாடு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

ஆருத்ரா தரிசனம் புதன்கிழமை (டிச.30) நடைபெறவுள்ளது. மாா்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ஸ்ரீநடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, வீதியுலா எழுந்தருளல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சிவன் கோயில்களில் நடத்தப்படுகிறது. காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய ஸ்ரீசுந்தராம்பாள் சமேத ஸ்ரீகைலாசநாதா் கோயிலில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி செவ்வாய்கிழமை தொடங்கியது. முதல் நிகழ்ச்சியாக ஸ்ரீநடராஜருக்கு வெள்ளை மலா்கள், வெள்ளை நிறத்தினாலான திருவாபரணங்கள், வெண்பட்டு சாற்றப்பட்டு, மகா தீபாராதனை நடத்தப்பட்டு புறப்பாடு செய்யப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு காலை 8.30 மணியளவில் ஆருத்ரா தரிசனம் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.