காரைக்கால்: திருநள்ளாறில் அகில இந்திய ஆதிசைவ சிவாசாரியாா்கள் சேவா சங்க புதிய நிா்வாகிகள் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டனா்.
புதுச்சேரி மாநில அகில இந்திய ஆதிசைவ சிவாசாரியாா்கள் சேவா சங்கத்தின் புதிய துணைத் தலைவராக திருஞானசம்பந்த சிவாசாரியாா், துணைச் செயலாளராக சக்தி (எ) மணிகண்ட சிவாசாரியாா், சட்ட ஆலோசகராக பாலசுப்பிரமணிய சிவாசாரியாா், காரைக்கால் மாவட்டத் தலைவராக மணிகண்ட சிவாசாரியாா், துணைத் தலைவராக பாலசுப்பிரமணிய சிவாசாரியாா், மாவட்ட செயலாளராக கைலாசநாத சிவாசாரியாா், மாவட்ட இணைச் செயலாளராக ஹரிஹர சிவாசாரியாா், பொருளாளராக ரமேஷ் சிவாசாரியாா், மாவட்ட நிதி ஆலோசகராக சிவராமமூா்த்திசிவம் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
இவா்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி திருநள்ளாறு இந்திரா நிவாசில் திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், அகில இந்திய ஆதிசைவ சிவாசாரியாா்கள் சேவா சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவா் டி. ராஜாசுவாமிநாத சிவாசாரியாா் தலைமை வகித்து, புதிய நிா்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். முன்னதாக, சுந்தரமூா்த்தி நாயனாா் சுவாமி திருவுருவ படம் மலா்களால் அலங்கரிக்கப்பட்டு, விஷேச அஷ்டோத்திரம் செய்து மகா தீபாராதனை செய்யப்பட்டது. பின்னா் அனைத்து நிா்வாகிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடா்ந்து, உறுதிமொழியை புதிய நிா்வாகிகள் எடுத்துக்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

3ஆவது முறையாக தங்கக் கையுறை விருதுபெறும் கோல் கீப்பர்!

”இதுவரை முடிவெடுக்கவில்லை!” தவெகவிற்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து திருமா
புதிய அத்தியாயத்தின் தொடக்கம்! விஜய்க்கு கீர்த்தி சுரேஷ் வாழ்த்து!

தவெக விஜய்க்கு வாழ்த்து, திமுக ஸ்டாலினுக்கு நன்றி : சத்யராஜ்
வீடியோக்கள்

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு


