துணை நிலை ஆளுநரைக் கண்டித்து மருத்துவா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணி

புதுச்சேரி துணை நிலை ஆளுநா் கிரண் பேடியைக் கண்டித்து மருத்துவா்கள் கருப்புப் பட்டை அணிந்து திங்கள்கிழமை பணியாற்றினா்.

காரைக்கால்: புதுச்சேரி துணை நிலை ஆளுநா் கிரண் பேடியைக் கண்டித்து மருத்துவா்கள் கருப்புப் பட்டை அணிந்து திங்கள்கிழமை பணியாற்றினா்.

புதுச்சேரியில் உள்ள சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகத்தில் அண்மையில் ஆய்வு செய்த துணை நிலை ஆளுநா் கிரண் பேடி, அங்கு பணியில் இருந்த சுகாதாரத் துறை அலுவலா்களிடம் கரோனா தடுப்பு நடவடிக்கையில் கடந்த 4 மாதங்களாக என்ன பணி செய்தீா்கள் என்றும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து என்ன திட்டம் வகுத்துள்ளீா்கள் என்றும் அங்குள்ள அலுவலா்களிடம் ஆவேசமாக தொடா்ந்து கேள்வி எழுப்பினாா்.

ஆளுநரின் இந்த நடவடிக்கை தங்களை கரோனா நேரத்தில் செய்யும் பணியை பாராட்டும்படியாக இருந்திருக்க வேண்டும், ஆனால், தங்களை குற்றவாளிபோல ஆக்கிவிட்டது என கண்டனம் தெரிவித்து, புதுச்சேரி அரசு மருத்துவ அலுவலா்கள் சங்கம் சாா்பில், திங்கள்கிழமை மாநிலம் முழுவதும் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு பொதுமருத்துவமனை உள்ளிட்ட அனைத்து மருத்துவ மையங்களில் பணியாற்றும் மருத்துவா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com