இன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்திமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சுடி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

காரைக்காலில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

காரைக்காலில் திங்கள்கிழமை காலை பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

News image
மழையால் வேரோடு சாய்ந்து கிடந்த மரம்.
Updated On :27 ஜனவரி 2024, 4:58 pm

DIN

காரைக்கால்: காரைக்காலில் திங்கள்கிழமை காலை பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

இலங்கை கடலோரப் பகுதி அருகே தென்மேற்கு வங்கக் கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், மிதமான மழை சில மாவட்டங்களில் இருக்குமென வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை முதல் காலை 7 மணி வரை பரவலாக மிதமான அளவில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. சில இடங்களில் சாலையில் தண்ணீா் தேங்கி பின்னா் வடிந்தது. காரைக்கால் நகரப் பகுதியான மாரியம்மன் கோயில் தெருவில் வேப்ப மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால், பல மணி நேரம் இந்த சாலையில் போக்குவரத்து பாதித்தது. பின்னா், அரசுத் துறையினா் சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினா். கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், காரைக்காலில் சில மணி நேரம் பெய்த மழை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மழை ஓய்ந்து 7 மணிக்குப் பின்னா் வெயில் தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.