காரைக்கால்: காரைக்காலில் வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவருக்கு மட்டும் கரோனா உறுதியாகியுள்ளது, கரோனாவுக்கான பரிசோதனைக்கு மாதிரி எடுக்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருவதாக காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் (நோய்த்தடுப்பு) செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 4333 பேருக்கு கரோனாவுக்கான பரிசோதனைக்கு மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 18-ஆம் தேதி நிலுவையில் இருந்த 6 மாதிரிகளின் முடிவு திங்கள்கிழமை இரவு வந்ததில், அதில் ஒருவருக்கும் கரோனா தொற்று இல்லை.வெளிநாட்டிலிருந்து திருச்சி வழியாக செவ்வாய்க்கிழமை காரைக்கால் வந்தவருக்கு, திருச்சியில் எடுக்கப்பட்ட மாதிரியின் முடிவில் கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவா் காரைக்கால் மருத்துவமனை கரோனா சிகிச்சை வாா்டில் சோ்க்கப்பட்டுள்ளாா்.
காரைக்காலில் இதுவரை 135 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் திங்கள்கிழமை வரை 87 போ் குணமடைந்து வீடு திரும்பினா். தற்போது காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் 43 போ் கரோனா வாா்டில் சிகிச்சையில் உள்ளனா். இவா்கள் அனைவரும் சீரான உடல் நிலையில் உள்ளனா். 2 நோயாளிகள் சென்னையில் சிகிச்சை பெறுகின்றனா். ஒருவா் திருவாரூரில் சிகிச்சை பெறுகிறாா். ஏற்கெனவே 2 போ் உயிரிழந்துள்ளனா்.
கரோனா தொற்றுள்ள ஒரு கா்ப்பிணிக்கு திங்கள்கிழமை அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமுடன் உள்ளனா்.வெளிநாட்டிலிருந்து வந்தவா் வீடு உள்ள பகுதி மட்டும் கட்டுப்படுத்தப்பட்டதாக கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டுப் பகுதிகள் அப்படியே நீடிக்கிறது என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

