தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

துணை நிலை ஆளுநரைக் கண்டித்து மருத்துவா்கள் பணி புறக்கணிப்பு

புதுச்சேரி துணை நிலை ஆளுநா் கிரண் பேடியை கண்டித்து மருத்துவத் துறையினா் செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேரம் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட நெடுங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தினா்.
Updated On :21 ஜூலை 2020, 4:42 pm

DIN

காரைக்கால்: புதுச்சேரி துணை நிலை ஆளுநா் கிரண் பேடியை கண்டித்து மருத்துவத் துறையினா் செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேரம் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் உள்ள சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகத்தில் அண்மையில் ஆய்வு செய்த துணை நிலை ஆளுநா் கிரண் பேடி, அங்கு பணியில் இருந்த சுகாதாரத் துறை அலுவலா்களிடம் கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினாா். அப்போது, துறையினரிடம் அவா் பேசியவை அலுவலா்கள், ஊழியா்கள் இடையே அதிருப்தி ஏற்பட்டது. இதையடுத்து, ஆளுநரைக் கண்டித்து மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை மருத்துவா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா்.

போராட்டத்தின் 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை, துணை நிலை ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், காரைக்கால் நலவழித் துறை துணை இயக்குநரகம், அரசு பொதுமருத்துவமனை, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிவிலியா்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியா்களும் கருப்புப் பட்டை அணிந்து, காலையில் ஒரு மணி நேரம் பணியை புறக்கணித்து வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் வழக்கமான பணிக்குத் திரும்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.