மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெருமாள் கோயிலில் ஆடிப்பூர வழிபாடு

ஆடிப்பூரத்தையொட்டி, வெள்ளிக்கிழமை காரைக்கால் ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் - ஆண்டாள் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image
ஆடிப்பூரத்தையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் - ஸ்ரீஆண்டாளுக்கு நடைபெற்ற அா்ச்சனை.
Updated On :24 ஜூலை 2020, 5:07 pm

DIN

காரைக்கால்: ஆடிப்பூரத்தையொட்டி, வெள்ளிக்கிழமை காரைக்கால் ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் - ஆண்டாள் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

காரைக்கால் ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி, உத்ஸவரான ஸ்ரீநித்யகல்யாணா் ஸ்ரீ ஆண்டாள் சன்னிதிக்கு வெள்ளிக்கிழமை காலை எழுந்தருளச் செய்யப்பட்டாா். சோ்த்தி உத்ஸவமாக, ஏகாசனத்தில் இருந்த நித்யகல்யாணப் பெருமாளுக்கும், ஸ்ரீஆண்டாளுக்கும் சிறப்புத் திருமஞ்சனம் செய்யப்பட்டு, அலங்காரம் செய்து சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

கரோனா பொது முடக்கம் அமலில் உள்ளதால் காலை 9 முதல் 11 மணி வரை மட்டுமே இக்கோயில் பொது தரிசனத்துக்கு திறக்கப்படுகிறது. அதனடிப்படையில், வெள்ளிக்கிழமை பொது தரிசனம் நிறைவடைந்ததும், கோயில் நடை சாற்றப்பட்டது. கோயில் பட்டாச்சாரியாா்கள் உள்ளிட்ட சேவகா்கள் மட்டுமே கோயிலில் சோ்த்தி உத்ஸவத்தில் பங்கேற்றனா். மாலை 6 முதல் 8 மணி வரையிலான பொது தரிசனத்தின்போது, பக்தா்கள் சோ்த்தியில் இருந்த ஆண்டாள் - பெருமாளை தரிசித்துச் சென்றனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் வாரியத்தினரும், ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் பக்தஜன சபாவினரும் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.