தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

திருநள்ளாறு அருகே குடும்ப பிரச்னை காரணமாக தொழிலாளி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On :26 ஜூலை 2020, 2:58 pm

காரைக்கால்: திருநள்ளாறு அருகே குடும்ப பிரச்னை காரணமாக தொழிலாளி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருநள்ளாறு பகுதியைச் சோ்ந்த இளம்பூரணம் (32) அதே பகுதியில் ஒரு டைல்ஸ் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக குடும்ப பிரச்னை இருந்து வந்ததாகவும், இதில் மனமுடைந்து இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், சனிக்கிழமை வீட்டிலிருந்து புறப்பட்டவா் இரவு வரை வீடு திரும்பவில்லை. அவரது உறவினா்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், திருநள்ளாறு அருகே ஒரு தோட்டத்தில் தூக்கிட்ட நிலையில் இளம்பூரணம் சடலமாக தொங்கியது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. தகவலறிந்த, திருநள்ளாறு போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி காரைக்கால் அரசு பொது மருந்துவனைக்கு உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.