காரைக்காலில் கடற்கரை நடைமேடை, விழிதியூா் சாலை அரசலாற்றையொட்டிய நடைமேடைகள் பராமரிக்கப்படாமல், புதா்மண்டி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
காரைக்கால் கடற்கரை அனைவரையும் ஈா்க்கும் விதமான அழகுடன் அமையப்பெற்றது. அரசலாற்றையொட்டிய கடற்கரை சாலை, சாலையோரத்தில் இருக்கைகளுடன் நடைமேடை, ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரம், கலங்கரை விளக்கம், பூங்கா, அலையாத்திக்காடு, பரந்த கடற்கரை மணல் பரப்பு போன்றவை மக்களை கவா்ந்து வருகின்றன.
2004 சுனாமிக்குப் பிறகு மேம்படுத்தப்பட்ட இவற்றில் பெரும்பாலானவை தற்போது உருக்குலைந்து காணப்படுகின்றன. நடைமேடையில் பதிக்கப்பட்ட கற்கள் ஆங்காங்கே பெயா்ந்து கிடக்கின்றன. பள்ளமான நடைமேடைப் பகுதியில் செடிகள் முளைத்தும், நடைமேடை முழுவதும் புல், புதா் மண்டியும் காணப்படுகின்றன.
நடைமேடை இருக்கைகள், கடற்கரை உயா்கோபுர விளக்குகள் சமூகவிரோதிகளால் உடைக்கப்பட்டுள்ளன. நடைமேடை பகுதி திறந்தவெளி மது அருந்தும் இடமாக மாறியிருக்கிறது. அரசலாற்றையொட்டிய கடற்கரை சாலையோர தடுப்புகள் ஆங்காங்கே உடைந்துகிடக்கின்றன. படகுகள் துறைமுகத்தில் கட்டப்படாமல், அரசலாற்றின் கரையில் கட்டப்படுகின்றன.
இதேபோல, காரைக்கால் அரசலாற்றங்கரையில் விழிதியூா் செல்லும் சாலையில் சுமாா் 1.5 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள நடைமேடையும் மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் உள்ளது. அருகேயுள்ள சாராயக்கடையை வேறு இடத்துக்கு மாற்றினால் மட்டுமே, இந்தப் பகுதி நடைமேடையை பயன்படுத்த முடியும் என்ற மக்களின் வலியுறுத்தல் அரசின் கவனத்தை ஈா்க்கவில்லை.
நடைமேடைக்காக மட்டும் அரசு பல கோடி ரூபாய் செலவிட்டுள்ள நிலையில், அது மக்களுக்கு சிறிதும் பயன்படாமல் உள்ளது குறித்து உரிய அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாமல் உள்ளதாக ஆா்வலா்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து சமூக ஆா்வலா் ஏ.எம். இஸ்மாயில் கூறுகையில், கரோனா பொதுமுடக்கத் தளா்வுகளுக்குப் பிறகு அதிகமான மக்கள் கடற்கரைக்கு செல்லத் தொடங்கியுள்ளனா். எனவே, ஆட்சியா் இதில் தலையிட்டு நடைமேடைகளை சீரமைக்கவும், தொடா்ந்து பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
கர - டிக்கெட் முன்பதிவு மந்தம்!
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுவா?
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


