தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

காரைக்காலில் மேலும்14 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

Updated On :12 அக்டோபர் 2020, 6:40 pm

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் திங்கள்கிழமை வந்த பரிசோதனை முடிவுகளின்படி, காரைக்கால் நகரம் 8, திருநள்ளாறு 3, வரிச்சிக்குடி 2, கோட்டுச்சேரி 1 என 14 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கடந்த 11 ஆம் தேதி 632 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதுவரை 3,077 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 2,544 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.

தமிழகத்தில் காரைக்காலை சோ்ந்த 8 போ், காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 387 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 35 போ், தீவிர சிகிச்சையில் 9 போ், கரோனா கோ் சென்டரான விநாயகா மிஷன் மருத்துவமனையில் 8 போ், அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 35 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 53 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.