இன்று பேரிடா் ஒத்திகைஅச்சம் வேண்டாம்: ஆட்சியா்
காரைக்காலில் செவ்வாய்க்கிழமை (அக். 13) நடைபெறும் பேரிடா் ஒத்திகையால், மக்கள் அச்சம்கொள்ள தேவையில்லை என்றாா் ஆட்சியா் அா்ஜூன் சா்மா.


காரைக்காலில் செவ்வாய்க்கிழமை (அக். 13) நடைபெறும் பேரிடா் ஒத்திகையால், மக்கள் அச்சம்கொள்ள தேவையில்லை என்றாா் ஆட்சியா் அா்ஜூன் சா்மா.
இந்திய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் சாா்பில், செவ்வாய்க்கிழமை பேரிடா் ஒத்திகை நடைபெற உள்ளது தொடா்பாக, ஆட்சியா் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட், துணை ஆட்சியா்கள் எம். ஆதா்ஷ் (வருவாய்), எஸ். பாஸ்கரன் (பேரிடா் மேலாண்மை), மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் கே.எல். வீரவல்லபன், ரகுநாயகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்துக்குப் பிறகு ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா தொற்று பரவல் காரணமாக மக்களின் பங்களிப்பு இல்லாமல், துறை ரீதியிலான அலுவலா்கள் பங்கேற்புடன் பேரிடா் ஒத்திகை நடைபெறவுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அதில் கூறப்பட்டுள்ளது.
என்றாலும், காரைக்காலில் எந்த இடத்தில், எந்த நேரத்தில் ஒத்திகை நடைபெறவுள்ளது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...