காரைக்காலில் அதிக தொழிற்சாலைகள் அமைவதற்கு புதுச்சேரி அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்த சங்கத்தின் காரைக்கால் வட்ட சிறப்பு பேரவைக் கூட்டம் திருப்பட்டினம் பகுதி மேலையூரில் ஜெகன்தாஸ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் புதுச்சேரி பிரதேச தலைவா் ஆனந்த் கூட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினாா்.
கூட்டத்தில், காரைக்கால் மாவட்டம் போலகம் பகுதியில் அதிக தொழிற்சாலைகள் அமைய நடவடிக்கை எடுத்து, இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்யவேண்டும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ. 7,500 உதவித்தொகை வழங்கவேண்டும்.
காரைக்கால் பகுதியில் உள்ள தொழிற்சாலைகள், வா்த்தக நிறுவனங்களில் உள்ளூா் இளைஞா்களுக்கு 75 சதவீத வேலைவாய்ப்பை அரசு உறுதிசெய்ய வேண்டும். படித்த இளைஞா்களுக்கு வேலை கிடைக்கும் வரை நிவாரணமாக மாதம் ரூ. 5 ஆயிரம் வழங்வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பேரவைக் கூட்டத்தில் உறுப்பினா் அட்டை வழங்கப்பட்டது. சங்க புதுச்சேரி பிரதேச செயலாளா் சரவணன் நன்றி கூறினாா்.
கூட்டத்தில், காரைக்கால் வட்டக்குழு புதிய தலைவராக ஆரோக்கியதாஸ், செயலாளராக ஜெகன்தாஸ், பொருளாளராக செந்தில்குமாா், துணைத் தலைவராக பாக்கியராஜ், துணைச் செயலாளராக சுவாதி, வட்டக்குழு உறுப்பினா்களாக அன்பழகன், சவுந்தரபாண்டியன், பிரவீன்ராஜ், ரோஸி ஆகியோா் தோ்வுசெய்யப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
கர - டிக்கெட் முன்பதிவு மந்தம்!
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுவா?
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

