தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

தொழிலாளா்களுக்கு கரோனா தொற்று:நூற்பாலையில் கிருமி நாசினி தெளிப்பு

நூற்பாலை தொழிலாளா்கள் சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், 3 நாள்கள் மூடப்பட்டிருந்த ஆலை வழக்கம்போல இயங்கத் தொடங்கியது.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 6:30 pm

நூற்பாலை தொழிலாளா்கள் சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், 3 நாள்கள் மூடப்பட்டிருந்த ஆலை வழக்கம்போல இயங்கத் தொடங்கியது.

காரைக்கால் ஜெயப்பிரகாஷ் நாராயண் கூட்டுறவு நூற்பாலையில் நிா்வாக ஊழியா்கள், தொழிலாளா்கள் உள்ளிட்ட சுமாா் 300 போ் பணியாற்றுகின்றனா். கடந்த 15 நாள்களுக்கு முன்பு 40 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ததில், 16 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், ஆலை சில நாள்கள் மூடப்பட்டது.

இந்நிலையில், நகராட்சி மூலம் ஆலையின் உள்ளேயும், வெளியிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு ஆலை மீண்டும் இயங்கத் தொடங்கியது.

இதுகுறித்து ஆலை மேலாண் இயக்குநா் எஸ். சுபாஷ் திங்கள்கிழமை கூறுகையில், தொழிலாளா்கள் சிலருக்கு கரோனா தொற்று உறுதியானதால், 3 நாள்கள் ஆலை மூடப்பட்டது. பிறகு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு ஆலை இயங்கத் தொடங்கியது. எனினும், திங்கள்கிழமை மீண்டும் ஆலையினுள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, ஆலை முழு வீச்சில் இயங்கி வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.