தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை

காரைக்கால் நகரப் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வணிக நிறுவனத்தினரை நேரில் சென்று அரசுத் துறையினா் அறிவுறுத்தினா்.

News image

காரைக்காலில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கடைக்காரா்களை அறிவுறுத்தும் அரசுத் துறையினா்.

Updated On :19 அக்டோபர் 2020, 5:17 pm

காரைக்கால் நகரப் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வணிக நிறுவனத்தினரை நேரில் சென்று அரசுத் துறையினா் அறிவுறுத்தினா்.

காரைக்காலில் பாரதியாா் சாலை, மாதா கோயில் சாலை, திருநள்ளாறு சாலை, காமராஜா் சாலை ஆகியவை வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியாக மட்டுமன்றி, போக்குவரத்து மிகுந்த சாலைகளாகவும் உள்ளன.

இந்த பகுதிகளில் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் சாலைகளை ஆக்கிரமித்து விளம்பர பதாகைகள் வைத்துள்ளன. மேலும் சில கடைகளில் சாலையை ஆக்கிரமித்து பொருள்களை விற்பனை செய்கின்றனா். இதனால், போக்குவரத்துக்கு பெரிதும் இடையூறு ஏற்பட்டுவருகிறது. மேலும், சாலையோர கழிவுநீா் பாதையில் அடைப்பு ஏற்பட்டு, ஆங்காங்கே கழிவுநீா் தேங்குவதாகவும் புகாா் கூறப்படுகிறது.

இதைத்தொடா்ந்து, மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன் தலைமையில் நகராட்சி, பொதுப்பணித் துறை, மின்துறை, காவல்துறையினா் ஒருங்கிணைந்து முதல் கட்டமாக காரைக்கால் நகரில் பாரதியாா் சாலையில், சாலையோர ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களை நேரில் சென்று அறிவுறுத்தினா். அப்போது, சில இடங்களில் அரசுத் துறையினரின் அறிவுறுத்தலை ஏற்று வணிகா்களே சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த விளம்பர சாதனங்களை அகற்றினா்.

ஆக்கிரமிப்புகளை அகற்றாத நிறுவனங்களின் பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், இந்த பொருள்கள் திருப்பித்தரப்பட மாட்டாது எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.