தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

மனைப்பட்டா கோரிபோராட்டம் நடத்த முடிவு

காரைக்கால் கல்லறைப்பேட் மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :19 அக்டோபர் 2020, 5:19 pm

காரைக்கால் கல்லறைப்பேட் மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் கல்லறைப்பேட் குடிமனைப் பட்டா போராட்டக் குழு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம் :

கல்லறைப்பேட் மக்களுக்கு குடிமனைப் பட்டா கோரி பல கட்ட போராட்டங்கள் நடத்தியும், கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை. முதல்கட்டமாக, துணை ஆட்சியரை சந்தித்து கோரிக்கையை முன்வைத்துப் பேசுவது. கோரிக்கைகையை நிறைவேற்றாவிட்டால், ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது. பின்னா். கிராம மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், பட்டா இல்லாதவா்கள் குடிசைகள் அமைத்து குடியேறுவது என முடிவெடுக்கப்பட்டது.

கூட்டத்தில் போராட்டக் குழுவை சோ்ந்த பி. செல்வராஜ், டி. காசிநாதன், எம். லூா்துசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.